Published : 27 Aug 2016 14:50 pm

Updated : 14 Jun 2017 18:23 pm

 

Published : 27 Aug 2016 02:50 PM
Last Updated : 14 Jun 2017 06:23 PM

உலர்பழ அப்பம்

என்னென்ன தேவை?

பேரீச்சை, முந்திரி, அத்திப் பழம் தலா 2

தேங்காய்த் துருவல் கால் கப்

அரிசி மாவு, கோதுமை மாவு தலா கால் கப்

வெல்லம் ஒரு கப்

ஏலக்காய்ப் பொடி அரை டீஸ்பூன்

நெய் அல்லது எண்ணெய் தேவையான அளவு

எப்படிச் செய்வது?

ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, கோதுமை மாவு, வெல்லம், ஏலக்காய்ப் பொடி, தேங்காய்த் துருவல், உலர்பழத் துண்டுகள் அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டுக் கெட்டியாகக் கரைத்துக்கொள்ளுங்கள்.

வாணலியில் எண்ணெய் அல்லது நெய் ஊற்றிச் சூடானதும் கலவையில் சிறிது எடுத்து ஊற்றுங்கள். இருபுறமும் பொன்னிறமாக வெந்ததும் எண்ணெய் வடித்து எடுத்துப் பரிமாறுங்கள்.

உலர்பழ அப்பம்சிறுதானிய சீடைபஞ்சரத்ன தட்டைகடலை இஞ்சி கேக்நாவல்பழ கேக்தலைவாழை

You May Like

More From This Category

More From this Author