

என்னென்ன தேவை?
கோஃப்தாவுக்கு
வேகவைத்து மசித்த பலாக்கொட்டை - 10
பஜ்ஜி மாவு - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மிளகாய்ப் பொடி, கரம் மசாலா - சிறிது
கிரேவிக்கு
வெங்காயம் - 1
தக்காளி - கால் கப்
உப்பு - தேவையான அளவு
பச்சை மிளகாய் - 2
பட்டை, லவங்கம் - சிறிது
இஞ்சி - பூண்டு விழுது - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிதளவு
சர்க்கரை - ஒரு சிட்டிகை
வெண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன்
பிரிஞ்சி இலை - 2
எப்படிச் செய்வது?
மசித்த பலாக்கொட்டை, உப்பு, பஜ்ஜி மாவு ஒரு டேபிள் ஸ்பூன், கரம் மசாலா ஆகியவற்றைச் சிறிது தண்ணீர் தெளித்து, நன்றாகப் பிசைந்து நெல்லிக்காய் அளவுக்கு உருட்டிக்கொள்ளுங்கள். வாணலியில் எண்ணெய் சூடானதும் இந்த உருண்டைகளைப் போட்டுப் பொரித்தெடுங்கள்.
கிரேவிக்குக் கொடுத்துள்ள பொருட்களைச் சிறிது எண்ணெய் விட்டு வதக்கி, ஆறவிட்டு விழுதாக அரையுங்கள். வாணலியில் வெண்ணெய் விட்டு பிரிஞ்சி இலை, பட்டை, லவங்கம் போட்டு வதக்குங்கள். அரைத்த விழுதைச் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு நன்றாகக் கொதிக்கவிட்டு இறக்கிவையுங்கள். பொரித்த கோஃப்தாக்களை அதில் சேர்த்து, கொத்தமல்லித் தழை தூவிப் பரிமாறுங்கள்.
லட்சுமி சீனிவாசன்