

என்னென்ன தேவை?
புழுங்கல் அரிசி-1 கப்
கம்பு-அரை கப்
உளுந்து-கால் கப்
வெந்தயம்-அரை டீஸ்பூன்
எண்ணெய், உப்பு-தேவையான அளவு
எப்படிச் செய்வது?
அரிசி, கம்பு, உளுந்து, வெந்தயம் ஆகியவற்றை ஒன்றாக ஊறவைத்து நைஸாக அரைக்கவும். உப்பு சேர்த்துக் கரைத்துப் புளிக்கவைக்கவும். மறுநாள் காலை தோசையாக வார்க்கவும். விரும்பினால் மாவுடன் சிறிது முருங்கைக் கீரை சேர்த்துக்கொள்ளலாம்.
சாய்சுதா