

என்னென்ன தேவை?
அரிசி – 900 கிராம்
வெள்ளை உளுந்து – 100 கிராம்
இஞ்சி – சிறு துண்டு
பூண்டு – 4 பல்
பச்சை மிளகாய் – 2
சீரகம் – அரை டீஸ்பூன்
தேங்காய் - ஒரு துண்டு
எப்படிச் செய்வது?
இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், சீரகம் ஆகியவற்றை நன்றாக அரைத்துக்கொள்ளுங்கள். குக்கரில் வெள்ளை உளுந்து, அரிசி, அரைத்த விழுது, தேவையான அளவு தண்ணீர், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து வேகவையுங்கள். நான்கு விசில் வரை அடுப்பில் வைத்து எடுத்தால் ருசியான உளுந்து கஞ்சி சாதம் தயார். சின்ன வெங்காயச் சட்னியைத் தொட்டுக்கொண்டு சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.
- எஸ்.காயத்ரி, மதுரை