

என்னென்ன தேவை?
வெண்டைக்காய் - 100 கிராம்
கடலை மாவு - 1 கப்
சோள மாவு, அரிசி மாவு - தலா 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
தனியாத்தூள், மிளகுத்தூள், சீரகத்தூள் - தலா அரை டீஸ்பூன்
காய்ந்த ரொட்டித்தூள் - 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
எப்படிச் செய்வது?
வெண்டைக்காயை வட்டமாகவோ, நீளவாக்கிலோ நறுக்கிக் கொள்ளவும். கடலை மாவு, சோள மாவு, அரிசி மாவு இவற்றை ஒன்றாகக் கலக்கவும். இவற்றுடன் தனியாத்தூள், மிளகுத்தூள், சீரகத்தூள், மஞ்சள் தூள், தேவையன அளவு உப்பு, நறுக்கிய வெண்டைக்காய் ஆகியவற்றைச் சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்துப் பிசையவும். இந்தக் கலவையை 15 நிமிடங்கள் ஊறவிடவும். பொரிப்பதற்கு முன் வெண்டைக்காய் கலவையை ரொட்டித்தூளில் புரட்டியெடுத்து, சூடான எண்ணெயில் போட்டுப் பொரிக்கவும். காரம் அதிகம் வேண்டும் என்றால் 1 டீஸ்பூன் மிளகாய்த்தூளை மாவுக் கலவையுடன் சேர்த்துக் கொள்ளலாம்.
சுதா செல்வகுமார்