

என்னென்ன தேவை?
பச்சரிசி ஒரு கப்
தேங்காய்த் துருவல் அரை கப்
வாழைப்பழம் 2
வெல்லம் ஒரு கப்
ஏலக்காய் 2
உளுந்து ஒரு டீஸ்பூன்
எப்படிச் செய்வது?
கழுவி ஊறவைத்த உளுந்து, பச்சரிசியை நன்றாகத் தண்ணீர் வடித்து ஏலக்காய், வாழைப்பழம், வெல்லம், தேங்காய்த் துருவல் சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளுங்கள். அரைத்த மாவை நான்கு மணி நேரம் ஊறவையுங்கள். பிறகு சிறிய குழிக் கரண்டியால் மாவை எடுத்துச் சூடான எண்ணெயில் போட்டால் அப்பம் போல உப்பும். இருபுறமும் வெந்து பொன்னிறமானதும் எடுத்துப் பரிமாறுங்கள். எண்ணெய்ப் பலகாரங்களைத் தவிர்ப்பவர்கள் குழிப் பணியாரச் சட்டியில் நெய் தடவியும் இதைச் செய்யலாம்.