

அப்பம்
என்னென்ன தேவை?
வேர்க்கடலை,
கோதுமை மாவு - தலா 1 கப்
வெல்லத் தூள் - 2 கப்
ஏலப்பொடி - சிறிதளவு
உப்பு - சிட்டிகை
எண்ணெய் - தேவையான அளவு
எப்படிச் செய்வது?
வேர்க்கடலையை ஊறவைத்து, விழுதாக அரைக்கவும். அரைத்த விழுதுடன் கோதுமை மாவு, வெல்லத் தூள், ஏலப்பொடி, உப்பு சேர்த்து சற்றுக் கெட்டியாகக் கரைக்கவும். இதை ஐந்து நிமிடம் ஊறவிடவும். பணியாரச் சட்டியின் குழிகளில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, கரைத்த மாவை அதில் ஊற்றவும். ஒரு புறம் வெந்ததும் திருப்பிப் போட்டு வேகவிட்டு எடுக்கவும்.
வரலட்சுமி முத்துசாமி