

என்னென்ன தேவை?
பூவன் வாழைப்பழம் - 2
பஜ்ஜி மாவு - கால் கிலோ
எண்ணெய் – தேவையான அளவு
சர்க்கரை - ஒரு சிட்டிகை
எப்படிச் செய்வது?
வாழைப்பழத்தைத் தோல் நீக்கி, கொஞ்சம் பெரிய அளவில் நறுக்கிக்கொள்ளுங்கள். பஜ்ஜி மாவில் சிறிது சர்க்கரை, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, தோசை மாவு பதத்தில் கரைத்துக்கொள்ளுங்கள். வாழைப்பழத்தை மாவில் தோய்த்து, சூடான எண்ணெயில் பொரித்தெடுத்தால் வாழைப்பழ பஜ்ஜி தயார்.
லட்சுமி சீனிவாசன்