

என்னென்ன தேவை?
பச்சரிசி மாவு ஒரு கப்
வெங்காயம் 1
தக்காளி கெச்சப் அரை டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது அரை டீஸ்பூன்
உருளைக் கிழங்கு 1
பச்சைப் பட்டாணி அரை கப், மஞ்சள் தூள் கால் டீஸ்பூன்
கரம் மசாலா அரை டீஸ்பூன்
காஷ்மீரி மிளகாய்த் தூள் அரை டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் தேவையான அளவு
எப்படிச் செய்வது?
பச்சரிசி மாவுடன் வெந்நீர், தேவையான அளவு உப்பு, அரை டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து நன்றாகப் பிசையுங்கள். வாணலியில் எண்ணெய்விட்டுக் காய்ந்ததும் வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்குங்கள். அதனுடன் வேகவைத்த பட்டாணி, உருளைக் கிழங்கு ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறுங்கள். அதனுடன் காஷ்மீரி மிளகாய்த் தூள், உப்பு, கரம் மசாலா சேர்த்து நன்றாக வதக்குங்கள். இறுதியாக தக்காளி கெச்சப் சேர்த்துக் கிளறி இறக்கிவையுங்கள். பிசைந்துவைத்திருக்கும் கொழுக்கட்டை மாவைச் சிறிது எடுத்து சொப்பு செய்து அதனுள்ளே மசாலா கலவையைச் சிறிது வைத்து மூடி ஆவியில் வேகவையுங்கள்.