

என்னென்ன தேவை?
வெள்ளைப் பூசணி - 200 கிராம்
சிவப்புக் காராமணி - 100 கிராம்
பச்சை மிளகாய் - 5
தேங்காய் - 1 மூடி
தேங்காய் எண்ணெய் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிது
எப்படிச் செய்வது?
காராமணியை முதல் நாள் இரவே ஊற வைக்கவும். மறுநாள் குக்கரில் ஒரு விசில் வரும் வரை வேக வைத்துக்கொள்ளவும். பூசணியைச் சிறு சதுர துண்டுகளாக நறுக்கவும். பச்சை மிளகாயை நீளவாக்கில் கீறவும். தேங்காயைத் துருவி, முதல், இரண்டாம் பால் எடுத்துக்கொள்ளவும். அடி கனமான கடாயில் பூசணியுடன் இரண்டாம் தேங்காய்ப் பால் சேர்த்து வேக வைக்கவும். கீறிய மிளகாய், உப்பு சேர்க்கவும். காய் முக்கால் பதம் வெந்ததும் வேக வைத்த காராமணியை அதனுடன் சேர்க்கவும். முதல் பால் சேர்த்து, தேங்காய் எண்ணெய் ஊற்றி, கறிவேப்பிலை தூவி இறக்கவும். (பால் சேர்த்த பிறகு அதிக நேரம் கொதிக்கவிட வேண்டாம்.)