Published : 29 Jan 2017 01:07 PM
Last Updated : 29 Jan 2017 01:07 PM

குறிப்புகள் பலவிதம்: கைகொடுக்கும் திடீர் சட்னி!

# உளுந்து வடை செய்யும்போது மாவில் நீர் அதிகமாகி விட்டால், சிறிது பச்சரிசி மாவைத் தூவினால் மாவு கெட்டியாகிவிடும்.

# பஜ்ஜி, போண்டா செய்யும்போது எண்ணெய் அதிகம் பிடிக்காமல் இருக்க, சிறிதளவு இட்லி மாவைச் சேர்க்கலாம்.

# வீட்டிலுள்ள காய்கறிகளை எண்ணெயில் வதக்கி, பச்சை மிளகாய், சிறிது புளி, தேவையான உப்பு சேர்த்து அரைத்தால் திடீர் சட்னி ரெடி.

# கலந்த சாதத்தில் காரம் அதிகமாகி விட்டால், சிறிதளவு எலுமிச்சைச் சாற்றைப் பிழிந்து கிளறினால் காரம் குறைந்துவிடும்.

# கீரை சமைக்கும்போது சிறிது சர்க்கரையைச் சேர்த்தால் பச்சை நிறம் மாறாமல் இருக்கும்.

# வாழைப்பூவை ஆயும்போது சிறிதளவு உப்பை கையில் தடவிக்கொண்டால் பிசுக்கு ஒட்டாது.

# வெங்காய பஜ்ஜி செய்யும்போது வெங்காயத்தைச் சிறிதளவு எண்ணெய் விட்டு லேசாக வதக்கிய பிறகு நறுக்கினால் வட்டமாக உதிராமல் வரும்.

# இட்லி, தோசை மாவில் சிறிது காய்ந்த மிளகாயைப் போட்டு வைத்தால் மாவு சீக்கிரம் புளிக்காது.

# தோசை மாவில் உப்பு அதிகமானால், ஒரு கரண்டி ரவையை வெறும் வாணலியில் வறுத்து, பாலில் ஊறவைத்துச் சேர்த்தால் உப்பின் அளவு மட்டுப்படும்.

# வெறும் வாணலியில் இரண்டு டீஸ்பூன் கடலை மாவை வறுத்துக்கொள்ளுங்கள். பொரியல் செய்யும்போது கடைசியில் இந்தக் கடலை மாவைத் தூவினால் பொரியல் மொறுமொறுவென இருக்கும்.

# மோர்க் குழம்புக்கு அரைக்கும்போது சீரகத்துக்குப் பதில் ஒரு டீஸ்பூன் ஓமம் சேர்த்து அரைத்தால் குழம்பு மணமாகவும் சுவையாகவும் இருக்கும்.

# முந்திரிப் பருப்பு கேக் செய்யும்போது பருப்புடன் சிறிதளவு தேங்காயையும் அரைத்துச் சேர்த்தால் சுவை கூடும்.

# சேப்பங்கிழங்கை நன்றாகக் கழுவி, வட்டத் துண்டுகளாக வெட்டி, இட்லித் தட்டுகளில் வேக வைத்துத் தோலை உரித்தால் வழவழப்பு அதிகமில்லாமல் உரிப்பதற்கு எளிதாக இருக்கும்.

- பிரேமா தியாகராசன், திருச்சி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x