நவராத்திரி நல்விருந்து! - நெய் அப்பம்

நவராத்திரி நல்விருந்து! - நெய் அப்பம்
Updated on
1 min read

நவராத்திரி நெருங்கிவிட்டது. கொலு வைத்திருக்கும் வீடுகளுக்குச் சென்றால் அப்பம் லட்சியம், சுண்டல் நிச்சயம். ஆனால் எல்லாருடைய வீட்டிலும் ஒரே மாதிரி படையல் இருந்தால் அலுத்துப்போகாதா? நம் வீட்டுக்குக் கொலு பார்க்க வரும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் வித்தியாசமான பலகாரத்தைக் கொடுத்து அசத்த வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருக்கும். அவர்களின் ஆசையை நிறைவேற்றி வைக்க வந்திருக்கிறார் சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த சீதா சம்பத். எல்லோருக்கும் தெரிந்த பலகாரங்களைக் கூடுதல் சுவையுடனும் எளிதாகவும் செய்யக் கற்றுத்தருகிறார் இவர்.

என்னென்ன தேவை?

அரிசி - ஒரு கப்

வெல்லம் - ஒரு கப்

தேங்காய்த் துருவல் - கால் கப்

வாழைப்பழம் - ஒன்று அல்லது இரண்டு

ஏலக்காய் - 4

சோடா உப்பு - ஒரு சிட்டிகை

நெய் - அரை கப்

எப்படிச் செய்வது?

அரிசியைச் சுத்தம் செய்து ஊறவைத்து, கெட்டியாக அரைத்துக்கொள்ளுங்கள். வெல்லத்தைக் கரைத்து, கெட்டிப் பாகாக உருக்கி, அதை அரிசிமாவில் விட்டுக் கலந்துகொள்ளுங்கள். இந்தக் கலவையுடன் தேங்காய்த் துருவல், ஏலக்காய்ப் பொடி, சோடா உப்பு, வாழைப்பழத் துண்டுகளைச் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளுங்கள். பணியாரச் சட்டியை அடுப்பில் வைத்து, குழிகளில் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு உருகியதும், பாதி அளவுக்கு மாவு விடுங்கள். ஒருபுறம் வெந்ததும் திருப்பிவிட்டு, பொன்னிறமானதும் எடுத்துப் பரிமாறுங்கள். நவராத்திரி வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு இந்த நெய் அப்பத்தைப் படையலிடுவார்கள்.

சீதா சம்பத்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in