

என்னென்ன தேவை?
மாங்காய் வற்றல் - 10 துண்டுகள்
புளி - எலுமிச்சை அளவு
கடுகு, வெந்தயம் - தலா அரை டீஸ்பூன்
பெருங்காயம் - சிறு துண்டு
சாம்பார் பொடி - 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
எப்படிச் செய்வது?
மாங்காய் வற்றலில் வெந்நீர் தெளித்து, பத்து நிமிடம் ஊறவையுங்கள். வாணலியில் எண்ணெய் விட்டுச் சூடானதும் கடுகு, வெந்தயம், பெருங்காயத்தைச் சேர்த்து வறுத்துக்கொள்ளுங்கள். உடன் சாம்பார் பொடி, கறிவேப்பிலை சேர்த்துப் புரட்டுவிடுங்கள். புளியைக் கரைத்து ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொதிக்க விடுங்கள். பச்சை வாசனை போனதும் மாங்காய் வற்றலைச் சேர்த்துக் கொதிக்கவிடுங்கள். குழம்பு பதம் வந்ததும் இறக்கிவையுங்கள்.