

என்னென்ன தேவை?
வரகரிசி ஒரு கப்
தேங்காய்த் துருவல் 2 டீஸ்பூன்
மிளகாய்த் தூள், பெருங்காயத் தூள் தலா கால் டீஸ்பூன்
புளித்த தயிர் கால் கப்
வெண்ணெய் ஒரு டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் தேவையான அளவு
எப்படிச் செய்வது?
வரகரிசியைச் சூடுபட வறுத்துக்கொள்ளுங்கள். ஆறியதும் மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றியெடுங்கள். அதனுடன் தேங்காய்த் துருவல், உப்பு, காரப் பொடி, பெருங்காயத் தூள், வெண்ணெய், கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்துப் பிசையுங்கள். இந்தக் கலவையுடன் புளித்த தயிர் சேர்த்து நன்றாகப் பிசையுங்கள். பிசைந்த மாவைச் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, வெள்ளைத் துணியில் பரவலாகப் போட்டுவையுங்கள்.
வாணலியில் எண்ணெய் ஊற்றிச் சூடானதும் உருட்டி வைத்திருக்கும் சீடைகளைப் போட்டு, பொன்னிறமாக வெந்ததும் எடுத்துவிடுங்கள். சீடை செய்தால் வெடித்துவிடும் என்ற பயத்தினாலேயே பலரும் சீடை செய்யத் தயங்குவார்கள். சீடை உருண்டைகளை உருட்டிய பிறகு ஊசியால் இரண்டு அல்லது மூன்று இடங்களில் குத்திய பிறகு எண்ணெயில் போட்டால் வெடிக்காது.