

என்னென்ன தேவை?
கறுப்பு உளுந்து, சிவப்பு சம்பா பச்சரிசி – தலா அரை கிலோ
கருப்பட்டி - 800 கிராம்
நல்லெண்ணெய் - கால் லிட்டர்
எப்படிச் செய்வது?
கறுப்பு உளுந்தையும் பச்சரிசியையும் சுத்தம் செய்து, மெஷினில் அரைத்துக்கொள்ளுங்கள். அரை லிட்டர் தண்ணீரில் கருப்பட்டியைக் கரைத்து, லேசாகக் கொதித்ததும் வடிகட்டுங்கள். வடிகட்டிய கருப்பட்டிச் சாற்றை மறுபடியும் அடுப்பில் வைத்து கை ஒட்டும் பதத்தில் கிளறுங்கள். அரைத்துவைத்திருக்கும் மாவை வெல்லப் பாகில் சிறிது சிறிதாகச் சேர்த்து, நன்றாகக் கிளறுங்கள். அதில் நல்லெண்ணெய் ஊற்றி, களி பதத்துக்கு வந்தவுடன் இறக்கிவைத்துப் பரிமாறுங்கள்.