

என்னென்ன தேவை?
பச்சரிசி, சர்க்கரை – தலா ஒரு கப்
பால் - 4 கப்
பாசிப் பருப்பு - கால் கப்
வெல்லத் தூள் - அரை கப்
நெய் - 50 கிராம்
முந்திரி, திராட்சை - தலா 50 கிராம்
குங்குமப் பூ - சிறிதளவு
எப்படிச் செய்வது?
பச்சரிசி, பாசிப் பருப்பு இரண்டையும் வாணலியில் சிறிது நெய் சேர்த்து வறுத்துக்கொள்ளுங்கள். அதனுடன் நான்கு கப் பால், இரண்டு கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடுங்கள். கொதித்ததும் குக்கரில் வெயிட் போட்டு இரண்டு விசில் வந்ததும் தீயைக் குறையுங்கள். ஐந்து நிமிடம் வேகவிட்டு அடுப்பை அணைத்துவிடுங்கள். குக்கர் சூடு தணிந்ததும் திறந்து, அரிசி – பருப்பு கலவையை நன்றாக மசித்துக் கிளறுங்கள். அதில் பால், சர்க்கரை, வெல்லத் தூள் சேர்த்துக் கிளறுங்கள். நெய்யை ஊற்றி, ஏலப் பொடியைச் சேருங்கள்.
கலவையை நன்றாகக் கிளறி திராட்சை, முந்திரியை நெய்யில் வறுத்துச் சேர்த்து, குங்குமப் பூ தூவி இறக்கிவையுங்கள். இந்த அக்கார அடிசில், ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்குச் செய்யப்படும் நிவேதனங்களில் முக்கியமானது.
அனுசியா பத்மநாதன்