சமையலறை
பாகற்காய் சிப்ஸ்
என்னென்ன தேவை?
பாகற்காய் - 2
தயிர் - அரை கப்
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
மிளகாய்த் தூள் - ஒரு டீஸ்பூன்
சோள மாவு, அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன்
கடலை மாவு - ஒரு டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
எப்படிச் செய்வது?
பாகற்காயை மெல்லிய வில்லைகளாக நறுக்கிக்கொள்ளுங்கள். வாயகன்ற பாத்திரத்தில் தயிர், மஞ்சள் தூள், உப்பு, நறுக்கிய பாகற்காய் சேர்த்துப் பிசையுங்கள். இதை ஃபிரிட்ஜில் ஒரு மணி நேரம் வைத்தால் நன்றாக ஊறிவிடும். அரிசி மாவு, சோள மாவு, கடலை மாவு, உப்பு, மிளகாய்த் தூள் இவற்றைச் சிறிது தண்ணீர் தெளித்துக் கரைத்துக் கொள்ளுங்கள். ஊறிய பாகற்காயை இந்தக் கரைசலில் தோய்த்து சூடான எண்ணெயில் பொரித்தெடுங்கள். தயிர் சேர்ப்பதால் கசப்பு குறைவாகத் தெரியும். அதனால் குழந்தைகளும் விரும்பிச் சாப்பிடுவார்கள்
