

என்னென்ன தேவை?
கோதுமை மாவு - ஒரு கப்
தினை மாவு - அரை கப்
ஓமம், வெள்ளை மிளகுத் தூள் - தலா ஒரு டீஸ்பூன்
சீரகம், அம்சூர் பொடி - தலா அரை டீஸ்பூன்
கசூரி மேதி - 2 டேபிள் ஸ்பூன்
பால் - சிறிதளவு
உப்பு, நெய், எண்ணெய் - தேவையான அளவு
எப்படிச் செய்வது?
கோதுமை மாவு, தினை மாவு, ஓமம், வெள்ளை மிளகுத் தூள், சீரகம், அம்சூர் பொடி, கசூரி மேதி, தேவையான அளவு உப்பு இவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாகக் கலக்கவும். அதில் வெதுவெதுப்பான பால் ஊற்றி, சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசையுங்கள். பிசைந்த மாவைச் சப்பாத்திகளாக இடுங்கள். தோசைக்கல் காய்ந்ததும் இட்டுவைத்த சப்பாத்தியைப் போட்டு, சுற்றிலும் நெய்யும் எண்ணெயும் விட்டு இருபுறமும் திருப்பிப் போட்டு வெந்ததும் எடுத்துவிடுங்கள்.
சப்பாத்தியை ரோல் போலச் சுற்றி, டூத் பிக் குத்திவையுங்கள். தேவையான மசாலா சேர்த்திருப்பதால் இதற்குத் தொட்டுக்கொள்ள எதுவும் தேவையில்லை. விரும்பினால் தயிர் அல்லது சாஸ் தொட்டுச் சாப்பிடலாம். பால் சேர்ப்பதால் சப்பாத்தி மிருதுவாக இருக்கும். பால் பிடிக்காதவர்கள், வெதுவெதுப்பான தண்ணீர் சேர்த்துப் பிசையலாம்.