Last Updated : 05 Nov, 2014 10:36 AM

 

Published : 05 Nov 2014 10:36 AM
Last Updated : 05 Nov 2014 10:36 AM

பயறு கஞ்சி

என்னென்ன தேவை?

பச்சை பயறு - 200 கிராம்

அரிசி - 1 டம்ளர்

தேங்காய்த் துருவல் - 5 டேபிள் ஸ்பூன்

உப்பு, வெல்லம் - தேவையான அளவு

தண்ணீர் - 4 டம்ளர்



எப்படிச் செய்வது?

குக்கரில் தண்ணீர் ஊற்றி அரிசி, பச்சை பயறு, உப்பு சேர்த்து மூடி வேக வைக்கவும். 3 விசில் வந்ததும் இறக்கிவைக்கவும். சூடு ஆறியதும் குக்கரைத் திறந்து துருவிய தேங்காயில் பால் எடுத்து அதனுடன் துருவலையும் சேர்த்து பயறு கலவையுடன் கலக்கவும். மிதமான தீயில் 2 நிமிடம் வைத்து இறக்கவும். இந்தக் கஞ்சியுடன் தேவையான அளவு வெல்லத்தைப் பொடித்துப் போட்டு சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.





சுலைஹா பீவி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x