சமையலறை
நாவூறும் நெல்லைச் சுவை: பொரித்த குழம்பு
என்னென்ன தேவை?
பொடியாக நறுக்கிய அவரைக்காய் - கால் கப்
கத்தரிக்காய் - 2
முருங்கைக் காய் - 1
புடலங்காய், சேனை – தலா கால் கப்
மிளகுப் பொடி – அரை டீஸ்பூன்
மஞ்சள் தூள், பெருங்காயம் – தலா 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
அரைக்க: தேங்காய் - கால் கப்
சீரகம் - 2 டீஸ்பூன்
தாளிக்க: கடுகு, சீரகம் - 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
உளுந்து - 2 டீஸ்பூன்
எப்படிச் செய்வது?
வாணலியில் சிறிதளவு தண்ணீர் விட்டு காய்கறிகளுடன் மிளகுப் பொடி, மஞ்சள் தூள், பெருங்காயம், உப்பு சேர்த்து வேகவிடுங்கள். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை அரைத்து, காய்கறிக் கலவையில் சேர்த்து நன்றாகக் கொதிக்கவிடுங்கள். தாளிக்கும் பொருட்களைத் தாளித்து, குழம்பில் கொட்டி இறக்கிப் பரிமாறுங்கள்.
கமலா மூர்த்தி
