

என்னென்ன தேவை?
நவதானிய வகைகள் ஒரு கப்
இஞ்சி சிறு துண்டு
பச்சை மிளகாய் 1
கறிவேப்பிலை சிறிதளவு
கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு தலா அரை டீஸ்பூன்
தேங்காய்த் துருவல் கால் கப்
பெருங்காயம் ஒரு சிட்டிகை
உப்பு, எண்ணெய் தேவையான அளவு
எப்படிச் செய்வது?
நவதானிய வகைகளைச் சிறிதளவு உப்பு சேர்த்து வேகவையுங்கள். வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றிச் சூடானதும் கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு போட்டுத் தாளியுங்கள். பிறகு கறிவேப்பிலை, பெருங்காயம், வேகவைத்த நவதானியங்கள், தேங்காய்த் துருவல் ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறி இறக்கிவையுங்கள். படையலுக்கு வைக்காதபட்சத்தில் வெங்காயம் சேர்த்துத் தாளித்தால் சுவைகூடும்.