கிண்ணத்தப்பம்

கிண்ணத்தப்பம்
Updated on
1 min read

என்னென்ன தேவை?

பச்சரிசி - அரை கிலோ

தேங்காய் - 2

சர்க்கரை - முக்கால் கிலோ

ஏலக்காய் - 8

எப்படிச் செய்வது?

அரிசியைக் கழுவி தண்ணீரை நன்கு வடிகட்டவும். பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்கவைத்து அதில் அரிசியைப் போட்டு அரைமணி நேரம் ஊற வைக்கவேண்டும். தேங்காயைத் துருவி முதல் பாலைத் தனியாக எடுத்து வைக்கவும். இரண்டாவது மூன்றாவது முறை எடுத்த பாலைத் தெளித்து அரிசியை மைய அரைக்கவும். மாவு சற்று நீர்க்க இருக்க வேண்டும்.

சர்க்கரை, ஏலக்காயை மிக்ஸியில் பொடித்து முதல் பாலுடன் சேர்க்கவும். இந்தக் கலவையை மாவுடன் சேர்க்கவும். இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அடித்தட்டை தலைகீழாக வைக்கவும். வட்டமான எவர்சில்வர் தட்டில் சிறிது எண்ணெய் தடவி அதில் மாவை ஊற்றி 20 நிமிடம் வேக வைக்கவும். நன்றாக வெந்ததும் வெளியே எடுத்து ஆறியதும் விரும்பிய வடிவில் வெட்டிப் பரிமாறலாம்.

சுலைஹா பீவி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in