

என்னென்ன தேவை?
வேர்க்கடலை, பொட்டுக்கடலை, வெள்ளை எள் தலா ஒரு கப்
கேழ்வரகு மாவு, கம்பு மாவு தலா ஒரு கப்
முந்திரி 10
ஏலத்தூள் ஒரு டீஸ்பூன்
சர்க்கரைத் தூள் 6 கப்
நெய் 3 கப்
எப்படிச் செய்வது?
வேர்க்கடலை, பொட்டுக்கடலை, எள் இவற்றைத் தனித்தனியாக வறுத்து, மாவாகப் பொடித்துக்கொள்ளுங்கள். கம்பு மாவு, கேழ்வரகு மாவு இரண்டையும் வாசனை வரும்வரை வறுத்துக்கொள்ளுங்கள். மாவு வகைகளை ஒரு பெரிய பாத்திரத்தில் கொட்டி அதனுடன் சர்க்கரை, நெய்யில் வறுத்த முந்திரி, ஏலப் பொடி சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளுங்கள். இதில் சிறிது சிறிதாக நெய் சேர்த்து உருண்டைகளாகப் பிடியுங்கள். இந்த உருண்டையைச் சிறியவர்கள் முதல் பெரியவர்கள்வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடுவார்கள்.