

என்னென்ன தேவை?
மைதா மாவு - 2 கப்
முந்திரி - 20
பால் - ஒரு லிட்டர்
ஏலப் பொடி - 1 டீஸ்பூன்
கேசரி பவுடர் - கால் சிட்டிகை
சர்க்கரைத் தூள் - 3 கப்
எப்படிச் செய்வது?
முந்திரியைப் பொடித்துக்கொள்ளுங்கள். மைதா மாவு, பொடித்த முந்திரி இவற்றுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்துச் சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்துகொள்ளுங்கள். இந்த மாவைச் சிறு சிறு பூரிகளாக இட்டு, சூடான எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுங்கள்.
பாலை நன்றாகக் காய்ச்சி, கேசரி பவுடர், சர்க்கரை, ஏலப் பொடி சேர்த்து நன்றாகக் கொதிக்கவிட்டு இறக்கிவையுங்கள். பூரிகளை இந்தப் பாலில் ஒவ்வொன்றாக முக்கியெடுத்து, இரண்டாக மடித்து தட்டில் வையுங்கள். பால் மீதமிருந்தால், பூரிகள் மீது ஊற்றிப் பரிமாறுங்கள்.