

என்னென்ன தேவை?
எள்- ஒரு கப்
வெல்லம் - அரை கப்
வெள்ளரி விதை - கால் கப்
நெய் – 2 டீஸ்பூன்
எப்படிச் செய்வது?
சுத்தம் செய்த எள், வெள்ளரி விதை இரண்டையும் வெறும் வாணலியில் வறுத்துக்கொள்ளுங்கள். இரண்டையும் தூளாகப் பொடித்துக் கொள்ளுங்கள். வெல்லத்தைக் கெட்டிப் பாகு பதத்தில் காய்ச்சி, அதைப் பொடித்த எள் மற்றும் வெள்ளரி விதையுடன் கலந்து உருண்டைகளாகப் பிடியுங்கள். விஷ்ணு, மகாலஷ்மிக்கு நைவேத்தியம் செய்து, நவராத்திரிக்கு வரும் விருந்தினர்களுக்குப் பிரசாதமாகக் கொடுக்கலாம்.
சீதா சம்பத்