பீர்க்கங்காய் மிளகு கறி

பீர்க்கங்காய் மிளகு கறி
Updated on
1 min read

என்னென்ன தேவை ?

பீர்க்கங்காய் பிஞ்சு 3

மிளகு ஒரு டீஸ்பூன்

தக்காளி 2

மிளகாய்த் தூள் அரை டீஸ்பூன்

மல்லித் தூள் கால் டீஸ்பூன்

மஞ்சள் தூள் சிறிதளவு

பூண்டு - 1

சின்ன வெங்காயம் 10

நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு

கடுகு, உளுந்து, வெந்தயம் தலா அரை டீஸ்பூன் கறிவேப்பிலை, மல்லித்தழை சிறிதளவு

எப்படிச் செய்வது ?

பீர்க்கங்காயைத் தோல் சீவி, சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளுங்கள். மிளகு, தக்காளி, இரண்டு சின்ன வெங்காயம் இவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள்.

வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, வெந்தயம், கறிவேப்பிலை போட்டுத் தாளித்து பூண்டு, மீதமுள்ள வெங்காயம் சேர்த்து சிவக்க வதக்குங்கள். பிறகு நறுக்கி வைத்துள்ள பீர்க்கங்காயைச் சேர்த்து வதக்கி, அதனுடன் மஞ்சள் தூள், மல்லித் தூள், மிளகாய்த் தூள் சேர்த்து நன்றாக வதக்குங்கள். அரைத்துவைத்துள்ள கலவையைச் சேர்த்து சிறிதளவு தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிது நேரம் மூடிவைத்து வேகவிடுங்கள். தண்ணீர் வற்றியதும் தீயைக் குறைத்து, சுருள வதக்கி, மல்லித்தழை தூவி இறக்கிவையுங்கள்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in