

என்னென்ன தேவை?
தினை மாவு - 200 கிராம்
உருண்டை வெல்லம் - 150 கிராம்
நெய் - 2 டீஸ்பூன்
ஏலக்காய்ப் பொடி - ஒரு டீஸ்பூன்
எப்படிச் செய்வது?
வெல்லத்தில் சிறிது தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சி அதில் தினை மாவு, ஏலக்காய்ப் பொடி, நெய் சேர்த்துக் கிளறுங்கள். சூடு ஆறியதும் மாவை வட்டமாகத் தட்டி சூடான எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுங்கள். சிலர் முதல் நாள் மாவைக் கிளறிவைத்து மறுநாள் அதிரசம் செய்வார்கள்.
பார்வதி கோவிந்தராஜ்