

என்னென்ன தேவை?
இளநீர் - 1
தேங்காய்ப் பால் - 1 கப்
சர்க்கரை - அரை கப்
ஏலக்காய்த் தூள் - 1 சிட்டிகை
பாதாம், முந்திரி - சிறிதளவு
எப்படிச் செய்வது?
இளந்தேங்காயைப் பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள். சிறிது இளந்தேங்காயுடன் சர்க்கரையைச் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக்கொள்ளுங்கள். இளநீர், அரைத்தெடுத்த கலவை, தேங்காய்ப் பால், ஏலக்காய்த் தூள் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்துகொள்ளுங்கள். பொடியாக நறுக்கிய பாதாம், முந்திரியை இதில் சேர்த்துப் பரிமாறுங்கள்.
செஃப் காவிரிநாடன்