

என்னென்ன தேவை
இட்லி மாவு - ஒரு கப்
நறுக்கிய வெங்காயம் - கால் கப்
மிளகாய்ப் பொடி - ஒரு டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லி (நறுக்கியது) - ஒரு டேபிள் டீஸ்பூன்
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
கடுகு, உளுந்து - ஒரு டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
எப்படிச் செய்வது?
இட்லிக்கு மாவரைத்து உடனே எடுத்துவிடுங்கள். வாணலியில் எண்ணெய் ஊற்றி, அது நன்றாகக் காய்ந்ததும் கடுகு, உளுந்து போட்டுத் தாளியுங்கள். வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றைச் சேர்த்து லேசாக வதக்குங்கள். வதக்கிய கலவையை மாவில் போட்டுத் தேவையான அளவு உப்பு, மிளகாய்த் தூள், பெருங்காயத் தூள் சேர்த்து நன்றாகக் கிளறுங்கள். இந்த மாவைச் சூடான எண்ணெயில் சிறு சிறு உருண்டைகளாகப் போட்டுப் பொரித்தெடுத்தால் கார போண்டா தயார்.
- மேகலா