

என்னென்ன தேவை?
உதிர்த்த வெங்காய வடகம் – ஆறு டேபிள்ஸ்பூன்
துருவிய வெல்லம்- 2 டீஸ்பூன்
தனியா-2 டேபிள் ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 3
உளுந்து - ஒரு டேபிள் ஸ்பூன்
பெருங்காயம் - அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
பட்டை- சிறு துண்டு
சோம்பு – ஒரு டீஸ்பூன்
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
அடி கனமான வாணலியில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாய், பெருங்காயம், உளுந்து, தனியா ஆகியவற்றை வறுத்து, ஆறியதும் மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றியெடுங்கள். அதே வாணலியில் மேலும் சிறிது எண்ணெய் விட்டு வெங்காய வடகத்தை வறுத்துத் தனியே எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். கறிவேப்பிலையைச் சுருள வதக்கி, மிக்ஸியில் முதலில் பொடித்தவற்றுடன் சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள். பிறகு உப்பு, வெல்லம், வெங்காய வடகம், தேங்காய்த் துருவல் சேர்த்துத் துவையல் பதத்துக்கு அரைத்துக்கொள்ளுங்கள். இதில் சிறிதளவு எண்ணெய் விட்டு வதக்கி வைத்தால் இரண்டு, மூன்று நாட்கள்வரை கெடாது. இதை சாதத்தில் போட்டுப் பிசைந்து சாப்பிடலாம். இட்லி, தோசை, சப்பாத்திக்கும் தொட்டுச் சாப்பிடலாம்.