

என்னென்ன தேவை?
நறுக்கிய வாழைப்பழம் - 1
புளித் தண்ணீர் - கால் கப்
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் பொடி - சிறிதளவு
பொடிக்க
வேர்க்கடலை, தனியா – தலா ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 4
தாளிக்க
கடுகு – அரை டீஸ்பூன்
பெருங்காயம் - சிறிது
வெந்தயம் – கால் டீஸ்பூன்
எண்ணெய் - 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - தேவையான அளவு
எப்படிச் செய்வது?
தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களை எண்ணெய் விட்டுத் தாளித்து, புளித் தண்ணீரை ஊற்றுங்கள். அதில் உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து, கலவை நன்றாகக் கொதித்ததும் வாழைப்பழம் சேருங்கள். பொடிக்கக் கொடுத்துள்ள பொருட்களை நன்றாக வறுத்துப் பொடித்து, அதனுடன் சேர்த்துக் கொதித்த பின் இறக்கிவையுங்கள்.
லட்சுமி சீனிவாசன்