

என்னென்ன தேவை?
பசலைக் கீரை - 1 கட்டு
பாசிப் பருப்பு - அரை கப்
கடுகு, வெங்காயம், பூண்டு - சிறிதளவு
தேங்காய் - சிறிதளவு
சீரகம், மிளகு – தலா ஒரு டீஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவைக்கு
எப்படிச் செய்வது?
பசலைக் கீரையை நன்றாக அலசி, பொடியாக நறுக்குங்கள். பாசிப் பருப்பைக் குழைய வேகவையுங்கள். அதனுடன் பசலைக் கீரை, தேவையான அளவு உப்பு சேர்த்து வேகவிடுங்கள். தேங்காய், மிளகு, சீரகம் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைத்து அதைக் கீரை கலவையுடன் சேருங்கள்.
வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு போட்டுத் தாளியுங்கள். அதனுடன் நசுக்கிய பூண்டு, பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கி, கீரையில் கொட்டி இறக்கிவையுங்கள். மிளகாய் சேர்க்கத் தேவையில்லை. மிளகின் காரமே போதும்.
- செல்லம்