அன்னாசி ஜூஸ்

அன்னாசி ஜூஸ்
Updated on
1 min read

என்னென்ன தேவை?

அன்னாசி - 1 (பெரியது)

சர்க்கரை - அரை கிலோ

தண்ணீர் - அரை லிட்டர்

கே.எம்.எஸ். பவுடர் (பொட்டாசியம் மெட்டா பைசல்ஃபேட்) - கால் டீஸ்பூன்

சிட்ரிக் அமிலம் - கால் டீஸ்பூன்

அன்னாசி எசென்ஸ் - சில துளி (விரும்பினால்)

எப்படிச் செய்வது?

அன்னாசியைத் தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கி, மிக்ஸியில் போட்டு அடித்துக்கொள்ளுங்கள். வடிகட்டி, சாறெடுத்துக்கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடுங்கள். அதில் சர்க்கரையைச் சேருங்கள். சர்க்கரை கரைந்து ஓரளவு பிசுக்குப் பதம் வந்ததும் இறக்கிவைத்து ஆறவிடுங்கள். ஆறியதும் அதில் சிட்ரிக் அமிலம் சேர்த்து நன்றாகக் கலக்குங்கள்.

பிறகு அன்னாசி சாறு, கே.எம்.எஸ். பவுடர் சேர்த்துக் கலக்குங்கள். அன்னாசி எசென்ஸ் சேர்த்துக் குளிரவையுங்கள். விரும்பினால் மஞ்சள் கலர் சேர்க்கலாம். பிறகு ஈரம் இல்லாத பாட்டிலில் ஊற்றிவையுங்கள். தேவைப்படும்போது இந்த சாற்றை கால் டம்ளர் அளவுக்கு ஊற்றி, முக்கால் டம்ளர் குளிர்ந்த நீர் சேர்த்துப் பரிமாறுங்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in