

என்னென்ன தேவை?
கடலைப் பருப்பு, மைதா – தலா ஒரு கப்
அரிசி மாவு - கால் கப்
வெல்லத் தூள் - முக்கால் கப்
ஏலக்காய் - 5
தேங்காய்த் துருவல் – ஒரு டேபிள் ஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
எப்படிச் செய்வது?
கடலைப் பருப்பை அரை மணி நேரம் ஊறவையுங்கள். அதைக் குழையாமல் மலர வேகவைத்து, நீர் வடித்து உலரவிடுங்கள். ஆறியதும் வெல்லத் தூள், சிறிது உப்பு சேர்த்து பொலபொலப்பாக அரைத்துக்கொள்ளுங்கள். தண்ணீர் சேர்க்கக் கூடாது. இதனுடன் தேங்காய்ப் பூவை வறுத்துப் போட்டுப் பிசைந்து சிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளுங்கள்.
மைதா, அரிசி மாவு, உப்பு சேர்த்து நீர் விட்டு தோசை மாவு பதத்துக்குக் கரைத்துக்கொள்ளுங்கள். உருட்டி வைத்துள்ள உருண்டைகளை ஒவ்வொன்றாக மாவில் தோய்த்தெடுத்து சூடான எண்ணெயில் போட்டு, அடுப்பை நிதானமாக எரியவிடுங்கள். நன்றாக வேகவைத்து எடுத்துப் பரிமாறுங்கள்.
அனுசியா பத்மநாதன்