

என்னென்ன தேவை?
புதினா ஒரு கப்
நறுக்கிய வெங்காயம் அரை கப்
பச்சை மிளகாய் விழுது ஒரு டேபிள் ஸ்பூன்
கடலை மாவு அரை கப்
அரிசி மாவு கால் கப்
உடைத்த முந்திரி கால் கப்
சோம்பு, பூண்டு சேர்த்து அரைத்த விழுது அரை டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் தேவையான அளவு
எப்படிச் செய்வது?
சோம்பு, பூண்டு இரண்டையும் மிக்ஸியில் போட்டு ஒரு சுற்றி சுற்றியெடுத்தால் போதும். கடலை மாவு, அரிசி மாவு, பச்சை மிளகாய் விழுது, உடைத்த முந்திரி, வெங்காயம், சோம்பு-பூண்டு விழுது இவற்றுடன் புதினா இலைகளைச் சேர்த்துத் தேவையான அளவு உப்பு போட்டு சிறிது தண்ணீர் தெளித்துப் பிசையுங்கள். சூடான எண்ணெயில் கிள்ளிப் போட்டுப் பொரித்தெடுங்கள்.