

என்னென்ன தேவை?
தேங்காய்த் துருவல் ஒரு கப்
பச்சரிசி ஒரு டேபில் ஸ்பூன்
வெல்லத் துருவல் அரை கப்புக்குக் கொஞ்சம் அதிகம்
ஏலக்காய்த் தூள் அரை டீஸ்பூன்
முந்திரித் துண்டுகள் 2 டீஸ்பூன்
நெய் ஒரு டீஸ்பூன்
எப்படிச் செய்வது?
பச்சரிசியைப் பத்து நிமிடம் ஊறவைத்து, தேங்காயுடன் சேர்த்து, சூடான தண்ணீர் ஊற்றி அரைத்து, பால் எடுங்கள். மீண்டும் சிறிது வெந்நீர் ஊற்றி இரண்டாம் பால் எடுங்கள்.
வெல்லத்தைக் கரைத்து வடிகட்டி, அடுப்பில் வையுங்கள். பச்சை வாசனை போனதும் இரண்டாம் தேங்காய்ப் பாலை ஊற்றிக் கலக்குங்கள். முந்திரித் துண்டுகளை நெய்யில் வறுத்து, வெல்லக் கரைசலில் சேருங்கள். ஏலக்காய்ப் பொடி சேர்த்து, கொதித்ததும் அடுப்பை அணைத்துவிட்டு முதல் தேங்காய்ப் பால் ஊற்றிக் கலக்குங்கள்.
ஆடிப் பட்டம் தேடி விதைப்பதால் விவசாயிகளுக்கு மட்டும் உகந்ததல்ல ஆடி. அம்மனுக்குக் கூழ் வார்த்தல், ஊரைச் செழிக்கச் செய்யும் ஆறுகளை வணங்கும் ஆடிப் பெருக்கு, நீத்தாருக்குக் கடன் செய்யும் ஆடி அமாவாசை என்று ஆடியில் அடுக்கடுக்கான முக்கிய நிகழ்வுகள் உண்டு. அம்மன் வழிபாட்டில் தவறாமல் இடம்பிடித்துவிடுகிற சில உணவு வகைகளைச் சமைக்கக் கற்றுத் தருகிறார் சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த சீதா சம்பத். எடுத்ததற்கெல்லாம் பலகாரக் கடைகளை நாடும் இன்றைய தலைமுறையினரும் எளிதில் புரிந்துகொண்டு செய்யக்கூடியவை இந்த உணவு வகைகள்.