

என்னென்ன தேவை?
மைதா மாவு - 2 கப்
உப்பு - அரை டீஸ்பூன்
சர்க்கரை - ஒரு கப்
ரோஸ் எசென்ஸ் - சில துளி
நெய் - தேவையான அளவு
எப்படிச் செய்வது?
மைதா மாவில் உப்பு, சிறிதளவு நெய் விட்டு கலந்து தண்ணீர் தெளித்துக் கெட்டியாகப் பிசையுங்கள். பிசைந்த மாவிலிருந்து சிறிது எடுத்து சப்பாத்திபோல தேய்த்து, பாய் போலச் சுருட்டுங்கள். ஓரத்தை ஒட்டிவிட்டுச் சின்னச் சின்னத் துண்டுகளாக வெட்டுங்கள். இவற்றைச் சூடான நெய்யில் போட்டுப் பொரித்தெடுங்கள்.
சர்க்கரையைக் கெட்டிப் பாகாகக் காய்ச்சுங்கள். அதில் ரோஸ் எசென்ஸை ஊற்றிக் கலக்குங்கள். வேகவைத்த காஜாக்களைப் பாகில் போட்டுக் கலந்து ஊறவைத்து எடுங்கள். ஒடிஷா மாநிலத்தில் உள்ள பூரிஜெகந்நாதர் கோயிலில் தரப்படும் பிரசாதம் இது.