

என்னென்ன தேவை?
குடைமிளகாய் 4
கடுகு ஒரு டீஸ்பூன்
பெருங்காயத் தூள் கால் டீஸ்பூன்
மிளகாய்த் தூள் அரை டீஸ்பூன்
வெல்லத் தூள் ஒரு டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் தேவையான அளவு
எப்படிச் செய்வது?
குடைமிளகாய் விதைகளை நீக்கிவிட்டுப் பொடியாக நறுக்குங்கள். வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, பெருங்காயம் சேர்த்துத் தாளித்து, குடமிளகாய்த் துண்டுகளைச் சேர்த்து வதக்குங்கள். பாதி வதங்கியதும் மிளகாய்த் தூள், உப்பு சேர்த்துக் கிளறுங்கள். நன்றாக வெந்ததும் கரண்டியால் நன்கு மசித்துவிட்டு வெல்லம் சேர்த்துக் கிளறி இறக்குங்கள்.
சப்பாத்தி, தோசை, அடை, பொங்கல், தயிர் சாதத்துக்குத் தொட்டுக்கொள்ளலாம். பச்சை மிளகாய் போல சுள்ளென்று உறைக்காது.