

என்னென்ன தேவை?
சோள மாவு, மைதா மாவு, பொட்டுக்கடலை மாவு - தலா கால் கப்
சோம்பு, ஓமம் - தலா அரை டீஸ்பூன்
சமையல் சோடா, மிளகுத் தூள் - தலா ஒரு டீஸ்பூன்
வெண்ணெய் - 50 கிராம்
மோர் சிறிதளவு
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
எப்படிச் செய்வது?
மாவு வகைகளை ஒன்றாகச் சேர்த்து சலித்துக்கொள்ளுங்கள். அதனுடன் பொடித்த ஓமம், சோம்பு, மிளகுத் தூள், தேவையான அளவு உப்பு, சமையல் சோடா, வெண்ணெய் சேர்த்துப் பிசையுங்கள். மோரைச் சிறிதளவு ஊற்றிக் கெட்டியாகப் பிசைந்து மூன்று மணிநேரம் மூடிவையுங்கள். பிறகு சின்னச் சின்ன சப்பாத்திகளாக இட்டு, முக்கோணமாக மடித்து சூடான எண்ணெயில் பொரித்தெடுங்கள். ஒரு வாரம்வரை கெடாது.