

என்னென்ன தேவை?
அவல் - 2 கப்
வெங்காயம் - 1
கேரட், பீன்ஸ் துண்டுகள் - அரை கப்
தக்காளி - 2
இஞ்சி - ஒரு துண்டு
பச்சை மிளகாய் - 3
லவங்கம் - 4
ஏலக்காய் - 2
பட்டை – சிறு துண்டு
சோம்பு - ஒரு ஸ்பூன்
எண்ணெய் - 4 டீஸ்பூன்
கொத்தமல்லித் தழை - சிறிது
எப்படிச் செய்வது?
அவலைச் சுத்தம் செய்து, தண்ணீர் வடித்துப் பத்து நிமிடம் ஊறவையுங்கள். வாணலியில் எண்ணெய் விட்டுச் சூடானதும் சோம்பு, பட்டை, லவங்கம், ஏலக்காய் போட்டுத் தாளியுங்கள். அதனுடன் வெங்காயம், இஞ்சி விழுது, பச்சை மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து வதக்குங்கள். பிறகு காய்கறிகள், தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக வதக்குங்கள். தேவைப்பட்டால் தண்ணீர் தெளித்து வேகவிடுங்கள். காய்கள் வெந்ததும் அவலைப் போட்டுக் கிளறுங்கள். அவல் உதிரியாக வந்ததும் கொத்தமல்லித் தழை தூவி இறக்கிவையுங்கள். ஐந்தே நிமிடங்களில்ல் சுவையான சிவப்பு அரிசி அவல் தயார்.
- சீதா சம்பத்