

என்னென்ன தேவை?
உளுந்து – ஒரு கப்
மிளகு - 2 டீ ஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
எப்படிச் செய்வது?
உளுத்தம் பருப்பைக் கால் மணி நேரத்துக்கு ஊறவையுங்கள். பின்னர் நீரை வடித்துவிட்டு, ஐந்து நிமிடம் அப்படியே வையுங்கள். பிறகு தண்ணீர் சேர்க்காமல் கொரகொரப்பாக அரையுங்கள். அதில் மிளகும் உப்புத் தூளும் சேர்த்து இரண்டு சுற்று சுற்றியெடுங்கள்.
மாவில் ஒரு டேபிள் ஸ்பூன் சமையல் எண்ணெய் சேர்த்து நன்றாகப் பிசையுங்கள். மாவை வாழையிலையில் வைத்து, தட்டையாகத் தட்டி சூடான எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுங்கள். இந்த வடை ரங்கம் ரங்கநாதசுவாமி கோயிலில் பெருமாளுக்குப் பிரசாதமாகப் படைக்கப்படுகிறது. ஆஞ்சநேயருக்கு இந்த மாலைகளைக் கோத்து வடைமாலையாகச் சாற்றுவார்கள்.
அனுசியா பத்மநாதன்