

என்னென்ன தேவை?
இனிப்புச் சோளம் - ஒரு கப்
தேங்காய்த் துருவல் - அரை கப்
பச்சை மிளகாய் - 6
எண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு - ஒரு டீஸ்பூன்
உளுந்து - 2 டீஸ்பூன்
பெருங்காயம் - கால் டீஸ்பூன்
துருவிய கேரட், நறுக்கிய தக்காளி – தலா 2 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
சோளத்தை உப்பு சேர்த்து வேகவைத்துக்கொள்ளுங்கள். வாணலியில் எண்ணெய் விட்டுச் சூடானதும் கடுகு, உளுந்து, பெருங்காயம், நீளமாகக் கீறிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து வதக்கிக்கொள்ளுங்கள். அந்தக் கலவையுடன் கேரட் துருவல், இனிப்புச் சோளம் சேர்த்துக் கலக்குங்கள். நறுக்கிய தக்காளி, எலுமிச்சை சாறு, உப்பு ஆகியவற்றைச் சேருங்கள். தேங்காய்த் துருவலை இறுதியாகக் கலந்து பரிமாறுங்கள்.
சீதா சம்பத்