

என்னென்ன தேவை?
காய்ச்சி ஆறவைத்த பால் – அரை லிட்டர்
கேரட் – 50 கிராம்
பாதாம் பருப்பு - 10
உலர்ந்த திராட்சை - 1 டீஸ்பூன்
குங்குமப்பூ - சிறிதளவு
மிளகு - 15
சோம்பு – அரை டீஸ்பூன்
கசகசா – ஒரு டீஸ்பூன்
ஏலக்காய், கிராம்பு - 2
சக்கரை - 9 டீஸ்பூன்
எப்படிச் செய்வது?
கேரட்டை முழுதாக ஆவியில் வேகவைத்துத் தோல் நீக்குங்கள். கொதிக்கும் வெந்நீரில் பாதாம் பருப்பைத் தனியாகவும், மிளகு, கிராம்பு, ஏலக்காய், சோம்பு, கசகசா, உலர்ந்த திராட்சை ஆகியவற்றைத் தனியாகவும் ஊறவையுங்கள். பாதாம் பருப்பைத் தோல்நீக்குங்கள். பாதாம் தவிர ஊறவைத்த மற்ற பொருட்களை நைஸாக அரையுங்கள். அதில் கேரட்டைச் சேர்த்து விழுதாக அரையுங்கள். கடைசியாக பாதாம் சேர்த்துக் கொரகொரப்பாக அரையுங்கள். இந்த விழுதைப் பாலில் கலந்து ஒரு கொதி வந்ததும், சர்க்கரை சேர்த்து இறக்கிவையுங்கள். சர்க்கரை அளவைக் குறைத்துக்கொண்டு இறக்கிய பின்பு கொஞ்சம் தேன் சேர்க்கலாம்.
சுவையும் மணமும் நிறைந்த இந்த பானத்தைக் குடித்தால் சங்கீதமாக இனிக்கும் மனது!