பல்சுவை புடலை: குருமா

பல்சுவை புடலை: குருமா
Updated on
1 min read

என்னென்ன தேவை?

புடலங்காய் - 1

கொண்டக்கடலை அல்லது பச்சைப் பட்டாணி - 1 கப்

கேரட், வெங்காயம், தக்காளி – தலா 2

மஞ்சள் தூள் - சிறிதளவு

கரம் மசாலா - 1 டீஸ்பூன்

ஊறவைத்து அரைத்த பொட்டுக்கடலை - 2 டீஸ்பூன்

தனியா - 2 டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 4

தேங்காய்த் துருவல் - 4 டீஸ்பூன்

கொத்தமல்லி – சிறிதளவு

எண்ணெய், உப்பு – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

புடலங்காய், கேரட் இரண்டையும் நறுக்கி வேகவைத்துக் கொள்ளுங்கள், முதல் நாளே ஊற வைத்த கொண்டக்கடலையை வேகவையுங்கள். வேகவைத்தவற்றை ஊறவைத்து அரைத்த பொட்டுக்கடலையுடன் சேர்த்து, தேவையான அளவு உப்பு போட்டுக் கொதிக்கவையுங்கள். கலவை கெட்டியானதும் நறுக்கிய கொத்தமல்லி தழையைச் சேர்த்து இறக்கிவையுங்கள்.


வரலட்சுமி முத்துசாமி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in