

என்னென்ன தேவை?
பேரிச்சம்பழம் - 10
உலர் திராட்சை - ஒரு டேபிள் ஸ்பூன்
முந்திரி, பாதாம் – தலா 10
வேர்க்கடலை (தோல் நீக்கியது) - ஒரு கைபிடி
பிஸ்தா - ஒரு டேபிள் ஸ்பூன்
எப்படிச் செய்வது?
பேரிச்சம்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்குங்கள். பருப்பு வகைகளை ஒவ்வொன்றாகப் பொடித்துக்கொள்ளுங்கள். இவற்றுடன் உலர் திராட்சையைக் கலந்து வைத்துக்கொள்ளுங்கள். மைதா மாவில் சிறிதளவு நீர் சேர்த்துக் கெட்டியாகக் கரைத்துக்கொள்ளுங்கள். உலர் பழக் கலவையைச் சிறு உருண்டையாகப் பிடித்து அதை மைதா மாவு கரைசலில் தோய்த்து, சூடான எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுங்கள். குழந்தைகள் இந்த இனிப்பு போண்டாவைக் கேட்டு வாங்கிச் சுவைப்பார்கள்.
- மேகலா