அசரவைக்கும் நெல்லை சமையல்: தாளித்த கொழுக்கட்டை

அசரவைக்கும் நெல்லை சமையல்: தாளித்த கொழுக்கட்டை
Updated on
1 min read

என்னென்ன தேவை?

இட்லி அரிசி - 2 டம்ளர்

தேங்காய் - அரை மூடி (துருவியது)

காய்ந்த மிளகாய் - 5

கடுகு, உளுந்து – தலா அரை டீஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிதளவு

உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

இட்லி அரிசியை நான்கு மணிநேரம் தண்ணீரில் ஊறவைத்து, நைசாக அரையுங்கள். வாணலியில் மூன்று டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி, மாவைச் சேர்த்து கொழுக்கட்டை பதத்துக்கு வதக்குங்கள். வேறொரு வாணலியில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, மிளகாய் வற்றல் சேர்த்துத் தாளித்து, மாவில் கொட்டுங்கள். அதனுடன் உப்பு, தேங்காய்த் துருவல் சேர்த்துப் பிசையுங்கள். மாவை விரும்பிய வடிவில் கொழுக்கட்டைகளாகப் பிடித்து, இட்லி தட்டில் வேகவைத்து எடுங்கள்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in