சமையலறை
சிறுதானிய நொறுவை: தேங்காய்ப் பால் கறிவேப்பிலை கீர்
என்னென்ன தேவை?
அடர்த்தியான தேங்காய்ப் பால் - ஒரு கப்
இளநீர் வழுக்கை (பொடியாக நறுக்கியது) - கால் கப்
கறிவேப்பிலை - கால் கப்
வெல்லம் - ருசிக்கேற்ப
தேன் - 2 டீஸ்பூன்
ஏலக்காய்ப் பொடி, சுக்குப் பொடி – தலா கால் டீஸ்பூன்
எப்படிச் செய்வது?
சிறிது தேங்காய்ப் பாலுடன் கறிவேப்பிலையை அரைத்துச் சேருங்கள். அதனுடன் இளநீர் வழுக்கை, வெல்லம், தேன், ஏலக்காய்ப் பொடி, சுக்குப் பொடி ஆகியவற்றைச் சேர்த்துக் கலந்தால் தேங்காய்ப்பால் கறிவேப்பிலை கீர் தயார்.
பார்வதி கோவிந்தராஜ்
