

என்னென்ன தேவை?
குதிரைவாலி மாவு - 100 கிராம்
பொட்டுக்கடலை மாவு - 100கிராம்
முருங்கைப்பூ - 1 கப்
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 2
இஞ்சி விழுது - ஒரு டீஸ்பூன்
சோம்பு - இரண்டு டீஸ்பூன்
உடைத்த முந்திரிப் பருப்பு – 50 கிராம்
கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
எப்படிச் செய்வது?
குதிரைவாலி மாவு, பொட்டுக்கடலை மாவு இரண்டையும் அகலமான பாத்திரத்தில் போட்டு அவற்றுடன் உப்பு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி விழுது, சோம்பு, முருங்கைப்பூ, நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை, முந்திரிப் பருப்பு ஆகியவற்றைச் சேர்த்துக் கலக்குங்கள். அதனுடன் சிறிது சிறிதாகத் தண்ணீர் விட்டு நன்றாகப் பிசையுங்கள். வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் பிசைந்து வைத்திருக்கும் மாவைக் கிள்ளிப்போட்டுப் பொன்னிறமாகப் பொரித்தெடுங்கள். மாலையில் பள்ளி முடிந்து சோர்வுடன் வீடு திரும்பும் குழந்தைகளுக்கு ஏற்ற தின்பண்டம் இது.
சுசிலா