

என்னென்ன தேவை?
கத்தரிக்காய் - கால் கிலோ
சின்ன வெங்காயம் - 100 கிராம்
வெல்லம் - சிறு துண்டு
கடுகு, உளுந்து - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
புளி - நெல்லிக்காய் அளவு
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
எப்படிச் செய்வது?
இதற்குக் கொஞ்சம் பெரிய கத்தரிக்காயை வாங்கிக்கொள்ளவும். கத்தரிக்காயின் மேலே எண்ணெய் தடவி, ஸ்டவ்வில் சுடவும். அதன் அதன் தோல் தானாகவே கழன்று வரும்வரை சுடவும். பிறகு கத்தியால் கீறி, உள்ளே இருக்கும் சதைப்பற்றை மட்டும் வெளியே எடுக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும். பிறகு நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். அதில் கத்தரிக்காய் சதைப்பகுதி, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் சேர்த்து ஸ்டவ்வை சிம்மில் வைத்துக் கிளறவும். பிறகு வெல்லத்தைக் கரைத்துச் சேர்க்கவும்.
அல்லது 2 டீஸ்பூன் சர்க்க்கரை சேர்க்கலாம். கலவை நன்றாகக் கெட்டியானதும் இறக்கிவைத்து, கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும். சப்பாத்தி, ரொட்டி, இட்லி, தோசை, பிரெட் ஆகியவற்றுக்குத் தொட்டுக்கொள்ளலாம்.
குறிப்பு: மும்தாஜ் பேகம்