

லலிதா சஹஸ்ரநாமத்தில் வருவதுபோல அம்பிகை பாயசான்னப்ரியை. நிமிடங்களில் தயாராகிவிடக்கூடிய இந்த கேரட் பாயசத்தைச் செய்தால் அம்பிகையைத் துதிக்க இன்னும் அதிக நேரம் கிடைக்கும்.
என்னென்ன தேவை?
கேரட் - 2
ஏலக்காய் - 4
கடலைமாவு - 1 டேபிள் ஸ்பூன்
நெய் - 1 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை - அரை கப்
பால் - 1 லிட்டர்
பாதாம்பருப்பு - 10
எப்படிச் செய்வது?
கேரட்டை ஆவியில் வேகவைத்து ஆறவிடவும். கடலைமாவை நெய்யில் வறுத்து, தண்ணீரில் கரைத்து, பச்சை வாசனை போக கொதிக்கவிடவும். கடலைமாவுக் கரைசலோடு கேரட், ஏலக்காய் சேர்த்து அரைக்கவும். கடைசியில் பாதாம் பருப்பு சேர்த்து கரகரப்பாக அரைக்கவும்.
பாலைக் காய்ச்சி அதில் அரைத்த கலவையைச் சேர்த்துக் கொதிக்கவிடவும். ஒன்று சேர்ந்து வந்ததும் சர்க்கரை சேர்க்கவும். சர்க்கரை கரைந்ததும் இறக்கி வைக்கவும்.
குறிப்பு: மீனலோசனி பட்டாபிராமன்